உணவு மானியத்திற்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு…! “ரேஷன் கடைகளில் இனி முழு கோதுமைக்கு குட்பை…” பட்ஜெட்டில் வெளியான பாக்கெட் கோதுமை மாவு திட்டம்…!!

By Devi Ramu on ஆவணி 5, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தில் புதிய மாற்றங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை முழு கோதுமையாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி அதற்குப் பதிலாகப் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கோதுமை மாவு வழங்கும் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இப் புதிய முயற்சியைச் செயல்படுத்துவதற்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்காக மொத்தமாக ரூ.14,830 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்களை அவர்களின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று விநியோகிக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இச்சேவையை மாநிலம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக அரசு சார்பில் ரூ.7.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள் கார்டுதாரர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.