“மாதம் ரூ.2,500 மற்றும் 6 இலவச சிலிண்டர் எப்போது…?” நிதியமைச்சர் மரிய வில்சன் அளித்த விளக்கம்…!!!

By Devi Ramu on ஆவணி 5, 2026

Spread the love

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கான மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை மற்றும் ஆண்டுக்கு 6 இலவசச் சமையல் எரிவாயு உருளைகள் போன்ற அறிவிப்புகள் இடம் பெறாதது பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் அளவு இருமடங்காக உயர்ந்து ரூ.10 லட்சம் கோடியைத் தொட்டுள்ளதாகவும், வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் வட்டிச் சுமைகள் அதிகமாக இருப்பதால் புதிய திட்டங்களுக்கான நிதி ஆதாரம் குறைவாகவே உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மாநிலத்தின் நிதிநிலையை இயல்பு நிலைக்குக் கொண்டுவரக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் எனக் குறிப்பிட்ட அவர், குறுகிய கால அரசியல் ஆதாயங்களை நோக்கமாகக் கொள்ளாமல், அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். மேலும், அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருதல், தேவையற்ற விதிமுறைகளைத் தளர்த்துதல் மற்றும் சிறு தொழில்துறையினரை ஊக்குவித்தல் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அரசின் வீண் செலவுகள் குறைக்கப்பட்டு, நிதி நெருக்கடியில் இருந்து மாநிலம் விரைவில் மீட்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.