சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். சிலர் உயரமான இடங்களில் ஏறி ஆபத்தான முறையில் வீடியோ எடுக்கின்றனர். வேறு சிலர் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு அருகே நின்று படம்பிடிக்கின்றனர். ஆனால், மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ரீல்ஸ் மோகத்தால் ஒரு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பால்கர் மாவட்டத்தின் வசாய்-விரார் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மதுபன் கட்டிட வளாகத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வரும் 21 வயதான வினீத் குமார் என்பவரே காயமடைந்த இளைஞர் ஆவார். சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்காக வித்தியாசமாக வீடியோ எடுக்க விரும்பிய அவர், வானில் வெடிக்கும் பட்டாசு ஒன்றை கையில் பிடித்தபடியே பற்றவைக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்தப் பட்டாசு வானத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, எதிர்பாராத விதமாக அவரது கையிலேயே பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்தில் அவரது கை பலத்த சேதமடைந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் சுமார் ஐந்தரை மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை செய்து கையில் 72 தையல்களைப் போட்டுள்ளனர்.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…