காரை நிறுத்தச் சொன்ன காவலரை 200 மீட்டர் தூரம் பறக்கவிட்ட ஓட்டுநர்….. மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான ‘நாகாபந்தி’ வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு காவலர் திலீப் போய் சிக்னல் காட்டியுள்ளார். ஆனால், அந்த காரை ஓட்டிவந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல், காவலர் திலீப் மீது மோதிவிட்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார். இதில் எதிர்பாராதவிதமாக தூக்கி வீசப்பட்ட காவலர் திலீப், காரின் முன்பகுதி மீது விழுந்தார்.

காவலர் பானட் மீது விழுந்த பிறகும் சிறிதும் இரக்கமின்றி காரை நிறுத்தாத அந்த ஓட்டுநர், வாகனத்தை மேலும் அதிவேகமாக இயக்கிச் சென்றார். சுமார் 200 மீட்டர் தூரம் வரை காவலரை பானட்டிலேயே ஆபத்தான முறையில் இழுத்துச் சென்ற அவர், அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த காவலர் திலீப் போய்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன், அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரில் போலி பதிவு எண் பயன்படுத்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக காரின் உண்மையான உரிமையாளரைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளபோதிலும், அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Nanthini

Recent Posts

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

12 minutes ago

ஐயோ… என்னது இது?… ரயிலில் பயணியின் உணவில்… கிடந்த உலோகத் துண்டு… ஊழியர் கொடுத்த விளக்கம்… IRCTC-யின் அதிரடி ஆக்‌ஷன்…!

குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…

17 minutes ago

திக் திக் நிமிடங்கள்… எதுவுமே வேலை செய்யல?… ரயில் விபத்திற்கு நொடிக்கு முன் இன்ஜின் அறையில்… ஓட்டுநர் கதறிய பகீர் வீடியோ… இணையத்தில் வைரல்…!

அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…

27 minutes ago

அதிர்ச்சி… 150 கோடியை நெருங்கும் இந்திய மக்கள் தொகை… வைரலாகும் டெல்லி AIIMS டிஜிட்டல் பலகை…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

40 minutes ago

“ஐயோ சாவு இப்படியா வரணும்?”…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த நாட்டிய கனவு… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஷாக்கிங் வீடியோ….!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…

51 minutes ago

ஐயோ கடவுளே… 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை… அதிர்ச்சி பின்னணி என்ன?… கொந்தளிப்பில் கிராம மக்கள்…!

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டம், கரோத் தாலுகாவில் உள்ள லுக்கா கிராமத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் பாலியல்…

52 minutes ago