ஓடும் ரயிலில் ரம்பாவை அடித்த லைலா.. பட வாய்ப்பை பறித்தது தான் காரணமா..? பல வருட கதையை தூசி தட்டிய பிரபலம்..

By Sumathi

Updated on:

கடந்த 1990களில் நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகையாக வலம் வந்தவர். அருணாசலம், காதலா காதலா, விஐபி, ராசி, மின்சார கண்ணா, உள்ளத்தை அள்ளித்தா என பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் த்ரி ரோஸஸ் என்ற படத்தை ரம்பா தயாரித்தார். அவரது அண்ணன் வாசுதான் படப்பிடிப்பு செலவுகளை கவனித்துக்கொண்டார். ரம்பா, ஜோதிகா, லைலா என மூவரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஹீரோயின்களை மையப்படுத்திய படம் என்பதால், த்ரி ரோஸஸ் என படத்துக்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது.

   

இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஊட்டிக்கு ரயிலில் சென்ற போது, ஏஸி கோச்சில் இருந்த ரம்பா, வெளியே வந்து நின்றுள்ளார். அப்போது லைலாவும் அவருடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஆவேசம் வந்தவராக லைலா, ரம்பாவை பிடித்து உலுக்கி கண்டபடி தாக்கினார். என்ன செய்வதென்றே தெரியாமல் அதிர்ச்சியில் இருந்த ரம்பாவை தாறுமாறாக லைலா அடித்துள்ளார். சத்தம் கேட்டு கோச்சுக்குள் இருந்த ஜோதிகா ஓடிவந்துள்ளார். ரயிலில் இருந்து கீழே விழுந்துவிடும் ஆபத்தில் இருந்த ரம்பாவை ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினர் காப்பாற்றியுள்ளனர். ஏன் அப்படி நடந்துக்கொண்டேன் என்றே எனக்கு தெரியவில்லை. திடீரென ஒரு மாதிரி சாமி வந்தது போல ஆகிவிட்டது என்று கூறியிருக்கிறார் லைலா.

 

இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, த்ரி ரோஸஸ் படத்தில் நடிக்க சம்பளம், அட்வான்ஸ் எல்லாம் கொடுத்த நிலையில் லைலா ஏன் இப்படி நடந்துக்கொண்டார் என ரம்பாவுக்கு தெரியவில்லை. ஆனால் அப்புறம்தான் அதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது. விஜபி என்ற படத்தில் பிரபுதேவா, அப்பாஸ் நடித்தனர். இந்த படத்தில் அவர்களுக்கு ஜோடியாக சிம்ரன், லைலா நடிக்க கமிட் ஆகினர். படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார்.

அப்போது ஓட்டலில் தங்கியிருந்த லைலாவை, சம்பளம் அட்வான்ஸ் வாங்க தயாரிப்பாளர் அலுவலகத்துக்கு வரச்சொன்ன போது, வர மறுத்துவிட்டார். சரி, கதை கேட்க வாருங்கள் என்று அழைத்த போதும், அப்படி எல்லாம் வரமுடியாது. கதை சொல்ல டைரக்டரை வரச்சொல்லுங்கள் என்று லைலா கூறியிருக்கிறார். அதனால் கோபமடைந்த தாணு, லைலா இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என கூறிவிட்டார். அதன்பின் அந்த கேரக்டரில் ரம்பாவை நடிக்க வைத்துள்ளனர். அதனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு ரம்பா தான் காரணம் என தவறாக நினைத்த லைலா, ரயிலில் ரம்பாவை தாக்கியிருக்கிறார் என்று தெரிய வந்தது, என்று அதில் கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.

author avatar
Sumathi