“குடிச்சுட்டு பொம்பளைங்க கூட கும்மாளம் போடுபவர்கள் எம்.ஜி.ஆர் ஆக முடியுமா?”… விஜய்யை வெளுத்து வாங்கிய கே.பி. முனுசாமி….!

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை மறைமுகமாகச் சாடிப் பேசியுள்ளார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் ஆளுமையுடன் இன்றைய நடிகர்களை ஒப்பிட முடியாது என்றும், எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்கள் வாயிலாக மக்களுக்கு நற்கருத்துக்களைக் கொண்டு சென்றவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திரைப்படங்களில் மது அருந்துவது, பெண்களுடன் நடனமாடுவது மற்றும் வன்முறை காட்சிகளில் நடிப்பவர்கள் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்று கே.பி. முனுசாமி விமர்சித்துள்ளார். எம்.ஜி.ஆர் மது அருந்துபவர்களைத் திருத்தும் கதாபாத்திரங்களில் நடித்ததோடு, நிஜ வாழ்விலும் தாய் உள்ளத்தோடு ஏழை எளிய மக்களுக்காகத் தனது சொத்துக்களை வாரி வழங்கியவர் என்று புகழாரம் சூட்டினார். தற்போதுள்ள நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அதில் ஒரு பகுதியைக்கூட மக்களுக்கு வழங்கியதில்லை என்றும், வெறும் திரை பிம்பத்தை வைத்துக்கொண்டு அரசியலில் சாதிக்க முடியாது என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்காகப் போராடும் சிந்தனை உள்ளவர்களே அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறிய முனுசாமி, எம்.ஜி.ஆர் தனது எதிரிகளுக்கும் உதவும் பண்பு கொண்டவர் என்பதற்கு அமைச்சர் துரைமுருகனின் கல்விச் செலவை ஏற்றதே சாட்சி என்றார். வரும் தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் ஒரு தாய் உள்ளம் கொண்ட ஆட்சி மலர வேண்டும் என்றும், அதற்கு அதிமுக தொண்டர்கள் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

2 minutes ago

அடச்சீ… இன்சூரன்ஸ் ரூ.44 லட்சத்திற்கு ஆசைப்பட்டு… மனைவியை காரை ஏற்றி கொன்ற கணவன்… உ . பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…

10 minutes ago

பகீர்… “சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம்”… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?…

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…

22 minutes ago

ஐயோ பாவம்… சுரங்கப்பாதையில் நொறுங்கிய SUV கார்… கதறித் துடித்த பயணிகள்… காங்கிரஸ் முக்கிய புள்ளி பரிதாப பலி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…

51 minutes ago