ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள மாண்டவ் கிராமத்தில், ஒரே புளிய மரத்தில் காதலர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் ஜோடி கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், காட்டுப் பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற மக்கள் அங்கு வீசிய துர்நாற்றத்தை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 15 நாட்களாக உடல்கள் மரத்திலேயே தொங்கிய நிலையில் இருந்ததால், அவை அடையாளம் காண முடியாத அளவிற்கு மிகவும் சிதைந்து போயிருந்தன.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த காதலர்கள் இருவரும் ஒரே ‘கோத்திரத்தைச்’ சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது சமூக மரபுகளுக்கு எதிரானது எனக் கூறி, இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி, காட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், இது தற்கொலையா அல்லது சாதி மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக நடந்த கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது சடலங்கள் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காதலர்கள் எங்காவது சென்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த குடும்பத்தினர், தற்போது அவர்களின் சிதைந்த சடலங்களைக் கண்டு கதறி அழுது வருவது காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது. சமூகக் கட்டுப்பாடுகள் இரண்டு இளம் உயிர்களைப் பறித்துவிட்டதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…