இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் பதிவு செய்த இந்த வீடியோவில், கண் பார்வையை இழந்த முதியவர் ஒருவர் பேருந்தில் தளர்ந்த கைப்பிடியை அமைதியாக சரி செய்யும் தருணம் பதிவாகியுள்ளது.
அவருடைய செயல்தான் சமூக வலைத்தளத்தில் மனிதநேயம் என்ற வார்த்தைக்கு புதிய வரையறையை அளித்துள்ளது. பயணத்தின் போது கைப்பிடி தளர்ந்து இருப்பதை கண்ட அந்த முதியவர் நானும் ஒரு பயணி என்ற பொறுப்புணர்வுடன் அதனை சரி செய்வது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பொது சொத்துக்கு தனிப்பட்ட பொறுப்புணர்வு கொண்டு நடந்து கொள்ளும் இந்த செயல்முறை பலரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு சாதாரண குடிமகன் செய்த இந்த ஒரு சின்ன செயல் பெரிய பாடமாக மாறி உள்ளது. கண்பார்வையற்ற முதியவர் இப்படி ஒரு செயலை செய்தது சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கானோரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
டெல்லி செங்கோட்டையில் கடந்த வாரம் நடந்த கார் வெடி விபத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதனை…
வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குளிர்பான டீலர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கடன் வாங்கியவர் ஜாதியை சொல்லி பொதுவெளியில்…
பிரபல பின்னணிப் பாடகர் மனோ, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 26,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக பாஜக உடன்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி என்ற கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு 30…