திருமணமான பல பெண்களுடன் உல்லாசம்… கொலை செய்து தலையை தனியாக வெட்டிய நண்பர்கள்… சடலத்துடன் கோழி கழிவு, இறந்த நாயின் உடலை போட்ட கொடூரம்…!

Spread the love

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி என்ற கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு 30 வயதில் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது மணிகண்டனுக்கு பணியாற்றும் நிறுவனத்தில் 27 வயதுடைய பாரதிராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் அடிக்கடி வெளியில் செல்லும் இருவரும் பணத்திற்கு கணக்குப் பார்த்துக் கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து செலவழித்துள்ளனர்.

மேலும் பாரதிராஜாவும் மணிகண்டனும் பல்வேறு திருமணமான பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். திடீரென்று இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையாக மாறியது. இதன் காரணமாக பாரதிராஜா மணிகண்டன் இடம் அவருக்கு செலவு செய்த பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணிடம் பாரதிராஜா தொடர்பு வைத்துள்ளார்.

இதனை அறிந்த மணிகண்டன் பாரதிராஜாவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பார்க்கும் இடத்தில் எல்லாம் இது குறித்து பேசி அவமானப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாரதிராஜா மணிகண்டனை தீர்த்த கட்ட முடிவு செய்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி இரவு மணிகண்டனை மது அருந்த அழைத்து சென்றுள்ளார். அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு மணிகண்டன் மற்றும் பாரதிராஜா அவர்களது நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மணிகண்டன் மீண்டும் தன்னுடைய நண்பனிடம் அந்த பெண்ணை குறித்து பேசி தகராறில் ஈடுபட்டதால் பாரதிராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக தாக்கி கொலை செய்து தலையை துண்டித்துள்ளார்.

பிறகு அவருடைய உடலை பாரதிராஜா மற்றும் அவருடைய நண்பர்களான விக்னேஸ்வரன், மதன்ராஜ் ஆகியோர் மதுரை மாவட்டம் கூட கோவில் அருகே உள்ள கிராமத்தில் உள்ள தரைப்பாலம் அருகே வீசி உள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காணாமல் போன மணிகண்டனின் உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் பாலத்தின் அடியிலிருந்து மீட்டனர்.

ஆனால் தலை கிடைக்காத நிலையில் மணிகண்டனை கொலை செய்த பாரதிராஜா மற்றும் அவருடைய நண்பர்களான விக்னேஸ்வரன் மற்றும் மதன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து தலையை எந்த இடத்தில் போட்டீர்கள் என்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தரைபாலம் அருகே தலையை போட்டு அதன் மீது கல் வைத்துள்ளோம் என்று தெரிவித்தனர். அதேசமயம் மணிகண்டன் உடல் போடப்பட்ட பகுதியில் துர்நாற்றம் வீசியது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அப்பகுதியில் கோழி கழிவு மற்றும் இறந்து போன நாய் ஒன்றை போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

1 மணத்தியாலம் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

1 மணத்தியாலம் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

1 மணத்தியாலம் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

2 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

2 மணத்தியாலங்கள் ago