மனைவியை துடிதுடிக்க கழுத்தறுத்துக் கொன்ற கணவன்… பேத்தியை பார்த்து கதறி அழுத பாட்டி… திருச்செந்தூர் சென்று திரும்பியதும் நடந்த கொடூரம்…!

Spread the love

தர்மபுரி மாவட்டம் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட பூந்தி மஹால் தெருவில் பூங்கொடி (50) என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் வளையல் கடை வைத்து தொழில் செய்து வருகின்றார். இவருடைய மூத்த மகள் மகாலட்சுமி (29) கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் மகாலட்சுமி வெங்கடேஷ் தம்பதியினருக்கு 9 வயதில் நித்தீஷ் என்ற மகனும் ஐந்து வயதில் சாய் ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் எழுந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்து மகாலட்சுமி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கணவரிடம் சொல்லாமல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தர்மபுரியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மகாலட்சுமியின் தாய் வீட்டுக்கு அவருடைய கணவர் வெங்கடேஷ் சென்றுள்ளார். பிறகு கரூரில் தாய் வீட்டில் இருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு இன்று காலை மீண்டும் அரூர் வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் கணவன் மனைவியிடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டபோது வீட்டில் இருந்த மகாலட்சுமியின் 70 வயது பாட்டியான லட்சுமி அம்மாள் இருவரையும் சமாதானம் செய்தார்.

இதனைப் பார்த்த பாட்டி லட்சுமி அவரது மகள் பூங்கொடியை அழைத்து வர பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் கணவன் மனைவி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் வெங்கடேஷ் வீட்டிலிருந்த கத்தியால் மகாலட்சுமியின் கழுத்து மற்றும் கையில் வெட்டியதில் படுகாயம் அடைந்த மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அம்மா பூங்கொடி மற்றும் பாட்டி லட்சுமி வீட்டில் வந்து பார்த்தபோது மகாலட்சுமி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மகாலட்சுமி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மகாலட்சுமியை கொலை செய்த கணவரை தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

BREAKING: போதைப்பொருள் தடுப்புப்படை.. தமிழக அரசு அரசாணை…!!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது முதல் கையெழுத்திட்ட திட்டங்களில் ஒன்றான 'போதைப்பொருள் தடுப்புப் படை' அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.…

33 minutes ago

“இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்!”… மேடையிலேயே திருமணத்தை நிறுத்திய மணப்பெண்… மணமகன் செய்த சிறிய தவறு.. ஊரை சிரித்த அதிர்ச்சி பின்னணி…!!!

திருமண மேடையில் மணமகன் கழுத்தில் மாலை சூட வேண்டிய நேரத்தில், மணமகனைப் பார்த்தவுடன் மணப்பெண் திருமணத்தை நிறுத்தச் சொன்ன அதிர்ச்சி…

1 மணத்தியாலம் ago

மர்மமான முறையில் விழுந்த மணப்பெண்!… 14 நாள் திருமண வாழ்க்கையில் நேர்ந்த கொடூரம்… கணவர் சொன்ன அந்த ஒரு பதிலால் சிக்கிய உண்மை… ஜான்சியில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணம் முடிந்த 14-வது நாளிலேயே மணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

1 மணத்தியாலம் ago

“நான் இங்கேதான் இருக்கிறேன்!”… நள்ளிரவு 12:07 மணி.. போனில் வந்த அந்த மெசேஜ்… புதிய வீட்டில் பெண்ணிற்கு காத்திருந்த மரண பயம்… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

சரியாக நள்ளிரவு 12:07 மணி. நிஷா தனது புதிய பிளாட்டில் முதல் முறையாக தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். வெளியே மெல்லிய…

2 மணத்தியாலங்கள் ago

“அரசு கஜானாவுக்கு வேட்டு வைத்த முதல்வர்”… கோடி கோடியாக கொட்டிய 717 கடைகள் மூடல்… அதிர்ச்சியில் ஊழியர்கள்…!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், மக்கள் நலன் கருதி வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு…

2 மணத்தியாலங்கள் ago