பிரபல பின்னணிப் பாடகர் மனோ, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 26,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். கர்நாடக இசையை நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் பயின்ற இவர், திரைப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு 15 தெலுங்கு படங்களில் நடித்தும், மேடை நாடகங்களில் பங்கெடுத்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், பாடகர் மனோ ஒரு நேர்காணலில், நடிகர் சிவாஜி கணேசனைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இளையராஜாவின் வேண்டுகோளின்படி, கங்கை அமரன் தன்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று சிவாஜி கணேசனிடம் அறிமுகப்படுத்தியபோது, சிவாஜியின் கம்பீரத்தைக் கண்டு கை, கால் நடுங்கியதாகவும் தான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாகவும் மனோ தெரிவித்தார்.
சிவாஜி, “இவனா? எனக்கா பாடுகிறான்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு, “இளையராஜா சொன்னால் சரியாகத்தான் இருக்கும், பொழச்சிப் போ” என்று கூறிய மறக்க முடியாத நிகழ்வை அவர் மனம் திறந்து பகிர்ந்தார். மனோ, சிவாஜி நடித்த ‘ஜல்லிக்கட்டு’, ‘தேவர் மகன்’ போன்ற படங்களில் பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…