தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நேற்று கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள துயரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனிடையே பவானி அருகே பார்வை என்ற தாயுடன் வசித்து வந்த கல்லூரி மாணவர் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பழனி ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பார்வையற்ற மாற்றுத்திறனாளி சாந்தி.
இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த மகன்தான் மோகன் (19). நாமக்கல் மாவட்ட திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். கடந்த பத்து ஆண்டுகளாக பார்வையை இழந்த தாய் எந்த வேலைக்கும் செய்யாமல் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் விஜயின் தீவிர ரசிகராக இருந்த மோகன் நேற்று கரூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் தாயிடம் இந்த செய்தியை எப்படி கூறுவது என்று தெரியாமல் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் இருந்தனர். மகன் வருவான் என்று பார்வை இழந்த தாய் கண்ணீரோடு அமர்ந்திருந்த காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…