Connect with us

CINEMA

இந்த பசங்களுக்குப் படமே எடுக்க தெரியல… தயாரிப்பாளருக்கு போன் போட்டு புலம்பிய கமல்- படம் ரிலீஸ் ஆனதும் நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

தன்னுடைய படங்களில் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக இருப்பார். அதுபோல திறமையானவர்களைக் கண்டால் அவர்களுக்கான வாய்ப்புகளை எப்படியாவது தன்னுடைய கம்பெனியில் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுவார்.

   

அப்படி திறமையும் இளமையுமாக இருந்த கௌதம் மேனனை தன்னை ஒரு படத்தில் இயக்க அமர்த்தினார். முதலில் கமல்ஹாசன் தசாவதாரம் கதையைதான் கௌதமை இயக்க அழைத்துள்ளார். ஆனால் அந்த கதை தனக்கு ஒத்து வராது என்பதால் கௌதம் விலகிக் கொள்ளவே அவர் கதையில் கமல் நடித்த படம்தான் வேட்டையாடு விளையாடு.

இந்த படம் பல தடங்கல்களைத் தாண்டி 2 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்து ஒருவழியாக 2006 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படம் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் ஷூட் செய்யப்பட்டது. அப்போது அங்கு கௌதம் மேனன் கமல்ஹாசனை வைத்து காட்சிகளை எடுத்த விதம் அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம்.

ஒரு நாள் அமெரிக்காவில் இருந்து போன் செய்து அந்த படத்தின் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணனிடம் புலம்பியுள்ளார் கமல். அதில் “இந்த பசங்க என்ன படம் எடுக்குறாங்கன்னே எனக்குத் தெரியல. என்ன நடக்க வச்சு நடக்க வச்சு ஷூட் பண்ணிட்டு இருக்காங்க.” எனக் கூறி புலம்பியுள்ளார்.

ஆனால் தயாரிப்பாளர் “சார் எனக்கு கௌதம் மேல் நம்பிக்கை இருக்கிறது. அவர் நல்லா எடுப்பார். படம் நல்லா வரும். நீங்கள் ஒத்துழைப்புக் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார். அதே போல படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top