பாலிவுட் திரை உலகில் 90களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மிஸ்டர். ரோமியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜயின் குஷி திரைப்படத்தில் பேக்கரினா என்னும் பாடலில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்திருந்த இவர் பாலிவுட்டில் எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2009ல் ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஷில்பா ஷெட்டிக்கு தற்போது 48 வயது ஆகியுள்ளது. ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, கடந்த 2021-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் கைதானார். ஆபாச படங்களை தயாரித்து அதனை ஆன்லைனில் வெளியிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்.
இரண்டு மாதங்கள் சிறையில் இருந்து விட்டு வெளியே வந்துள்ள ராஜ்குந்த்ரா தனது வாழ்க்கையை ‘யூடி 69’ என்ற பெயரில் சினிமா படமாக எடுத்துள்ளார். அந்த நேரத்தில் ஷில்பா ஷெட்டி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ராஜ் குந்தரா தனது சமூக வலைதளத்தில் ‘நாங்கள் பிரிந்து விட்டோம். இந்த கடினமான நேரத்தில் தயவு செய்து எங்களுக்கான நேரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன்மூலம் ராஜ் குந்தரா-ஷில்பா ஷெட்டி ஜோடியின் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மும்பையில் பேட்டி அளித்த ராஜ்குந்த்ரா தனது விவாகரத்துக்கான காரணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது ‘நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று ஷில்பா ஷெட்டியிடம் சொன்னதும் செருப்பை கழற்றி என் மீது வீசி எறிந்தார். இதில் நான் அதிர்ச்சியடைந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் "டாஸ்மாக் கட்சி நிதி" எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக…
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…
பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் 'Sentinel-6' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது 'சூப்பர்…
தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் வடக்கு…
டெல்லியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்…