தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் நடிப்பில் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி Sohael Khaturiya என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்பூரில் உள்ள ஒரு பெரிய அரண்மனையில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது.
இத்திருமணத்தில் நெருக்கமானவர்களும், குடும்பத்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் ஹன்சிகாவின் திருமணம் வெளியாகி வருகிறது.திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இந்த வருடம் தனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 7 படங்களில் நடிப்பதாக நடிகை ஹன்சிகா சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காந்தாரி’ படத்தில் தற்பொழுது நடித்து வருகின்றார்.
இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் நடிகை ஹன்சிகாவுக்கு செல்ல பிராணிகளையும் பிடிக்கும். தனது வீட்டில் நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஹன்சிகா செல்லமாக வளர்த்து வந்த புரூஸோ என்ற நாய் இறந்து போனது. இதனால் வருத்தத்துடன் ஹன்சிகா தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘எனது மகன் போல் இருந்தாய். உன்னை இழந்த வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது’ என்று பதிவிட்டு உள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…