தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது இத்திரைப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் 2000ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும். நடிகை ஷாலினி சமீபத்தில் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் மற்றும் ஷாலினியின் மகளான அனோஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது லண்டனில் இவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம தல மகளா இது..? தேவதை போல இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…
இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…
உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…
மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…
பிரேசில் நாட்டின் சாண்டா கதரீனா மாகாணத்தில் உள்ள பிரையா கிராண்டே பகுதியில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஹாட் ஏர் பலூன்…