இங்கிலாந்தில் இருந்து கப்பல்களில் படையெடுத்து வந்த மணப்பெண்கள்! பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த விநோத வழக்கம்? இப்படி எல்லாம் நடந்திருக்கா?

By Arun

Published on:

இந்தியாவை பிரிட்டிஷார் முழுமையாக கைப்பற்றுவதற்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் உள்ள மாகாணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. அந்த சமயத்தில் இங்கிலாந்தில் படித்த பல இளைஞர்கள் இந்தியாவில் வந்து அதிகாரிகளாக பணி செய்தனர்.

ஆதலால் நல்ல படித்த நல்ல வேலையில் இருக்கும் பிரிட்டிஷ் இளைஞர்கள் இந்தியாவில் அதிகமாக இருந்தனர். ஆதலால் நல்ல வேலையில் இருக்கும் மாப்பிள்ளைகளைத் தேடி இங்கிலாந்தில் இருந்து அதிக இளம்பெண்கள் கப்பல்களில் இந்தியாவிற்கு வந்து இறங்கினர். இவ்வாறு இங்கிலாந்து மாப்பிள்ளைகளைத் தேடி இளம்பெண்கள் இந்தியாவிற்கு வந்த கப்பல்களை “ஃபிஷிங் ஃபிளீட்” என்று அழைத்தனர்.

   

18 ஆம் நூற்றாண்டில் இந்த வழக்கம் அதிகளவில் நடந்தது. இங்கிலாந்தில் இருந்து இந்திய துறைமுகங்களில் வந்து இறங்கும் இளம்பெண்களை பார்ப்பதற்காகவே பிரிட்டிஷ் இளைஞர்களின் கூட்டம் அலைமோதும். இளம்பெண்கள் மிகவும் கவர்ச்சிகரமாக கண்களை மயக்கும் உடைகளோடுதான் கப்பல்களில் இருந்து இறங்குவார்கள்.

அவர்களில் பிடித்த ஆணை திருமணம் செய்துகொண்டு அந்த பெண்கள் செட்டில் ஆகிவிடுவார்கள். பிரிட்டிஷ் இளைஞர்களை மட்டுமல்ல அப்போது கிழக்கிந்திய கம்பெனியுடன் நல்ல உறவில் இருந்த இந்திய மன்னர்களையும் ஜமீன்தார்களையும் கூட அந்த பெண்கள் திருமணம் செய்துகொண்டனர்.

இவ்வாறு இங்கிலாந்தில் இருந்து மாப்பிள்ளைகளைத் தேடி வரும் பெண்களுக்கு கிழக்கிந்திய கம்பெனி காலக்கெடுவையும் விதித்திருந்தது. அதே போல் இது போன்று மாப்பிள்ளைகளைத் தேடி வரும் ஆதரவற்ற இளம்பெண்களுக்கு ஆண்டுக்கு 300 டாலர் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. திருமணம் முடிந்தவுடன் இந்த தொகையை திருப்பிக்கொடுத்துவிட வேண்டும்.

கிழக்கிந்திய கம்பெனி கொடுத்த காலக்கெடுவிற்குள் திருமணம் ஆகவில்லை என்றால் அந்த பெண்ணை இங்கிலாந்திற்கே திருப்பி அனுப்பிவிடுவார்கள். அந்த பெண் அந்த கடனை திரும்ப செலுத்த வேண்டும். இதில் சில பெண்கள் மன்னர்களுக்கு ஆசை நாயகியாக ஆகிவிடும் கொடுமையும் நடந்தது. அதே போல் அடிமை சந்தையில் சில பெண்களை விற்ற துயரங்களும் உண்டு. ஆனாலும் இங்கிலாந்து பெண்கள் பிரிட்டிஷ் மாப்பிள்ளைகளைத் தேடி கப்பல்களில் வந்து இறங்கிகொண்டே இருந்தனர். நல்ல வேலையில் இருக்கும் மாப்பிள்ளைகளை தேட அவர்களுக்கு வேறு வழி இல்லை என்பதுதான் உண்மை.

author avatar