Connect with us

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

HISTORY

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே உணவு நிறுவனம். பால் பொருட்கள், காஃபி, சாக்லேட், குளிர் பானம், சத்து பானம் என பல உணவு பொருட்களை தயாரித்து விநியோகம் உலகெங்கிலும் வியாபாரம் செய்து வருகிறது நெஸ்லே நிறுவனம்.

ஸ்விட்சர்லேண்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் உலகில் உள்ள பல நாடுகளில் தங்களது வியாபரத்தை பெருக்கியுள்ளது. அந்த வகையில் 1960 ஆம் ஆண்டு அந்நிறுவனம் ஒரு முறை ஜப்பான் நாட்டில் காஃபி வியாபாரத்தை தொடங்கியது. ஆனால் பெரிதளவில் ஜப்பானியர்கள் காஃபியை விரும்பவில்லை. இதனால் பிசின்ஸ் அதளபாதாளத்திற்குப் போனது.

   

ஏன் இந்த நிலை என்ற அந்நிறுவனம் ஆராய்ந்தபோது, ஜப்பானியர்கள் தேநீரைதான் அதிகமாக பருகுகிறார்கள் என்று தெரிய வந்தது. ஜப்பானில் காஃபி பருகும் கலாச்சாரமே இல்லை என்று தெரியவந்தது. ஆதலால் ஒரு மிகப்பெரிய திட்டத்தை தீட்டினார்கள் நெஸ்லே நிறுவனத்தினர்.

 

அதாவது ஜப்பானில் நெஸ்லே நிறுவனம் காஃபிக்கு பதிலாக காஃபி கொட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்பு வகைகளை வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். அந்த காலகட்டத்தில் இருந்த குழந்தைகள் அந்த இனிப்பு வகைகளை அதிகம் விரும்பி சாப்பிடத் தொடங்கினார்களாம். ஆதலால் அவர்களுக்கு காஃபியின் சுவை பழகிவிட்டது.

அந்த குழந்தைகள் பெரிய ஆட்களாக வளர்ந்துவிட்ட பிறகு காஃபியை விரும்பி பருகத் தொடங்கிவிட்டார்களாம். இவ்வாறு காஃபி என்ற ஒன்றை அந்நாட்டு குழந்தைகளிடம் பழக்கி பிற்காலத்தில் அந்நாடு முழுவதையும் காஃபிக்கு அடிமையாக்கியிருக்கிறார்கள். தற்போது அதிகளவு காஃபி பருகும் மக்கள் கொண்ட நாடாக ஜப்பான் திகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Continue Reading
To Top