இந்த சிறுவயது  புகைப்படத்தில் இருக்கும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பெண் பிரபலம் யார் தெரியுமா…?

By Begam

Published on:

விளையாட்டு வீர மங்கையான பி.வி. சிந்துவை பற்றி அறியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கனவை மெய்ப்பிக்க போராடி வரும் வீர மங்கை. இறகுப்பந்து ஆட்டத்தின் ரியோ 2016 ஒலிம்பிக் இறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்று இந்தியர்களின் மனதில் பாசக்கார சகோதரியாக இடம் பெற்றிருக்கிறார். பி.வி.சிந்து 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி ஐதராபாத்தில் பிறந்தவர்.

   

இவரது பெற்றோர்கள் இருவருமே நுட்பமான கைப்பந்தாட்ட வீரர்கள். பி.வி.சிந்துவின் தந்தை ரமணா கைப்பந்தாட்டத்தில் செய்த சாதனைகளுக்காக அர்ஜுனா விருது வென்றவர் . 21 வயது நிரம்பிய பி.வி.சிந்து தினமும் 27 கிலோமீட்டர் பயணம் செய்து பயிற்சிகள் மேற்கொண்டு வந்தவர். தினமும் 4 மணிக்கு எல்லாம் எழுந்து பயிற்சி மேற்கொள்ள சென்றுவிடுவாராம் சிந்து.

கடந்த 2014-ம் ஆண்டு என்.டி.டி.வி இவரை 2014-ம் ஆண்டின் சிறந்த இந்தியர் என அறிவித்து கௌரவித்தது. 18 வயதிலேயே அர்ஜுனா விருது வென்று சாதனை செய்தவர் பி.வி.சிந்து. தன் விளையாட்டின் மீது கொண்ட பேரார்வம் காரணமாக தனக்கு மிகவும் நெருக்கமான சகோதரியின் திருமணத்திற்கு கூட செல்லாமல் விளையாட சென்றவர் பி.வி.சிந்து. 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி, பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்திய பெண் என்ற கௌரவும் பெற்றார்.

2015-ம் ஆண்டு பி.வி. சிந்து இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ பெற்றார். பி.வி.சிந்து முன்னாள் இறகுப்பந்து ஆட்ட வீரர் புல்லேலா கோபிசந்த்தை பார்த்து உத்வேகம் பெற்றவர். அவரை தனது முன்மாதிரியாக வைத்து தான் விளையாட துவங்கினார். தற்பொழுது வரை களத்தில் களமிறங்கி கலக்கி வருகிறார் இவர். இந்நிலையில் இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.