அய்யோ… அவனை சும்மாவிட கூடாது… நள்ளிரவில் 3 வயதுக் குழந்தையைக் சித்ரவதை செய்து… கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்… நெஞ்சைப் பிளக்கும் கொடூரம்…!

Spread the love

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னக் கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி சுவாதி. இவர்களுக்கு 3 வயதில் விஷ்ணு பிரியா என்ற பெண் குழந்தை இருந்தது. கணவர் துரைப்பாண்டி மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வீட்டிற்கு வராததால், சுவாதி தாய் வீட்டில் தங்கி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, சிவகாசியைச் சேர்ந்த 27 வயதுடைய விக்னேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, சுவாதி தனது குழந்தையுடன் சிவகாசி திருத்தங்கலில் விக்னேஸ்வரனுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

விக்னேஸ்வரனும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், தினமும் குடித்துவிட்டு சுவாதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறின் போது, ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன் சுவாதியின் 3 வயது பெண் குழந்தையான விஷ்ணு பிரியாவைத் தரையில் அடித்து, முடியைப் பிடித்து இழுத்து இரவு முழுவதும் கொடூரமாகச் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளார். நள்ளிரவில் சுவாதி குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

மருத்துவமனையிலிருந்து உடலை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியதும், போலீசில் சரணடைய ஆட்டோ எடுத்து வருவதாகக் கூறி விக்னேஸ்வரன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி கிழக்கு போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய விக்னேஸ்வரனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“மாதம் ரூ.2,500 மற்றும் 6 இலவச சிலிண்டர் எப்போது…?” நிதியமைச்சர் மரிய வில்சன் அளித்த விளக்கம்…!!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கான…

16 minutes ago

உணவு மானியத்திற்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு…! “ரேஷன் கடைகளில் இனி முழு கோதுமைக்கு குட்பை…” பட்ஜெட்டில் வெளியான பாக்கெட் கோதுமை மாவு திட்டம்…!!

தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தில்…

32 minutes ago

கடன் ரூ.10.98 லட்சம் கோடி…! “வருவாய் துண்டு விழுந்தது எவ்வளவு…? பட்ஜெட்டில் இடம்பெற்ற பற்றாக்குறை மற்றும் செலவின பட்டியல்…!!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானம், செலவினங்கள் மற்றும் கடன்…

44 minutes ago

சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் எங்கே….? “பட்ஜெட் பிளாஸ்ட் இல்ல, வெறும் வேஸ்ட்…” தவெக அரசை வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்…!!

தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…

57 minutes ago

“செயற்கை நுண்ணறிவு முதல் தாய்மாமன் சீர் வரை….” தமிழக பட்ஜெட் 2026-ன் டாப் 10 மாஸ் திட்டங்கள்…!!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…

1 மணத்தியாலம் ago

“3 மணி நேரம் ரூமில் அடைத்து வைத்து…” பங்குச்சந்தை ஆலோசகர் பி.ஆர். சுந்தருக்கு சிக்கல்…! பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரால் பரபரப்பு….!

சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில்…

1 மணத்தியாலம் ago