#image_title
சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலா அவர்களுடன் சேர்ந்து திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சசிகுமார்.
பின்னர் இயக்குனர் அமீரிடம் இணைந்து மௌனம் பேசியதே மற்றும் ராம் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தை இயக்கி அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சசிகுமார்.
2019 ஈசன் திரைப்படத்தை இயக்கினார் சசிகுமார். பின்னர் அவரது நடிப்பிற்கு மக்கள் ஆதரவு தரவே நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் சசிகுமார். அதன்படி நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, குட்டி புலி, கொடிவீரன், கருடன், அயோத்தி போன்ற நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து பிரபலமான சசிகுமார் தற்போது இவர் நடிப்பில் நந்தன் என்ற திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சசிகுமார் தனது முதல் பட அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் சுப்ரமணியபுரம் படம் எடுக்கறப்போ கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடக்கிற அப்போ நான் சுவாதி கிட்ட அந்த சீன் சொல்றேன். அப்போ எனக்கும் சுவாதிக்கும் பயங்கர சண்டை வந்துடுச்சு. சுவாதி கோவத்திலேயே போயிருச்சு. ஏன்னா அவங்க ஹாப்பி என்டிங்கா இருக்கும்னு எதிர்பார்த்தாங்க. ஆனா அது முதுகுல குத்துற மாதிரி காட்சி இருந்ததுனால அவங்களுக்கு சுத்தமா பிடிக்கல. அந்த கோவத்திலேயே தான் ஃபுல்லா நடிச்சு முடிச்சாங்க என்று ஓபனாக கூறியிருக்கிறார் சசிகுமார்.
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…