ஹைதராபாத்தில் உள்ள சரஸ்வதி நகர் காலணியில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேரில் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பந்தல் போடுவதற்கான பொருட்களை இறக்கும்போது உலோக கம்பி அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியை தட்டியதில் நான்கு பேரும் தரையில் சாய்ந்தனர். இது தொடர்பான காட்சி அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த நான்கு பேரில் இரண்டு பேர் ஏணியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மற்ற இரண்டு பேர் கம்பியை இரக்க முயன்று உள்ளனர். அப்போது மின்சாரம் தாக்கியதும் நான்கு பேரும் மயங்கி தரையில் விழுந்தனர்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக உதவி செய்த போதிலும் ஒருவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஹைதராபாத்தில் கடந்த சில மாதங்களாகவே மின்சாரம் தாக்கி ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நிகழ்வு ஒன்பதாவது நிகழ்வாகும். குறிப்பாக கடந்த ஐந்து நாட்களில் மட்டும் நான்கு சம்பவங்கள் நடந்துள்ளது. தற்போது இந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…