ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர், பண்டி சந்திர சேகர்ரெட்டி. இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்த நிலையில், விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக, தன்னுடைய மகனையும், மகளையும் ஏரில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், வேலைக்கு ஆட்களை வைத்து செய்தால் செலவு அதிகரித்து விடும், மாடுகளைக் கொண்டு உழுதால் அதுவும் பெரும் கடனை சுமத்திவிடும் என்பதால், மகனையும் மகளையும் கொண்டு களைகளை எடுக்கும் பணி செய்கிறேன், என்றார். இவரிடம் உள்ள 9.5 ஏக்கர்களில், 3 ஏக்கரில் பயிர் செய்து வருகிறார். களை எடுக்க ஏக்கர் 1 க்கு ரூ. 1500 செலவாகும் என்பதால், அதை குறைப்பதற்காக அவர் மகனையும் மகளையும் பயன்படுத்திக் கொண்டார். அவருடைய மகன் கல்லூரி மாணவர், மேலும் அவருடைய மகள் பள்ளி படிப்பு படித்து வருகிறார். மேலும் விவசாயிகள் நல்ல லாபம் பெற, அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…