தலைநகர் டெல்லியில் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிஜ்வாசன் பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் ஒரு வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. குழந்தை தாய் அளித்த தகவலின் படி, அவர்களது வீட்டுக்கு அருகில் வாடகைக்கு இருந்த 32 வயது ஆண், குழந்தையை தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை கேட்டதும் தாய் அவசரமாக அந்த அறைக்கு சென்று பார்த்த நிலையில் கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது.
பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது குழந்தை ஆடை இல்லாமல் ரத்தத்தில் நனைந்து கிடந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். தற்போது போலீஸ் ஆர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடு முழுவதும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
தூத்துக்குடியில் கைதாகி மரணமடைந்த அருணாச்சலம் என்ற கைதியின் உயிரிழப்பு குறித்து, காவல்துறையினரால் தாக்கப்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும்…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், பத்லாபூர் சிர்காவ் பகுதியில் வசித்து வந்தவர் ஹரி ராம் சிங் (35). இவரது மனைவி…
நீட் மற்றும் பிற தகுதித்தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவி பெரும்…
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, கடந்த 21-ஆம் தேதியே தனது பதவியை…
கொழுக்குமலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கார்த்திக்(31) என்பவர், எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து சுமார் 500…
சென்னை மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் திரளக் கூடும் என்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப்…