இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக் கொன்ற கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாமியார் வீட்டில் தங்கியிருந்தபோது மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த அந்த நபர், குழந்தையைத் தூக்கிக்கொண்டு மாடிக்குச் சென்றுள்ளார். மனைவி தன்னுடனேயே உடனே வர வேண்டும் என்றும், இல்லையெனில் குழந்தையைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டிய அவர், குடும்பத்தினர் கதறி அழுது கெஞ்சியதையும் பொருட்படுத்தாமல் குழந்தையைத் கீழே தள்ளியுள்ளார். 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த அந்தப் பிஞ்சு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இந்தக் கொடூரச் செயலால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அந்த நபரைக் கையும் களவுமாகப் பிடித்து அறைக்குள் பூட்டி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தப்பியோட முயன்ற அந்தத் தந்தையை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய தகராறுக்காகச் சொந்தக் குழந்தையையே கொலை செய்த இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

BREAKING: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..! கிராமுக்கு ரூ. 50 குறைந்து சவரன் ரூ. 1.14 லட்சத்திற்கு விற்பனை..!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…

20 seconds ago

போலி வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி.. இனி AI வீடியோக்களில் ‘AI Generated’ லேபிள் கட்டாயம்… இனிமே யாரும் ஏமாற்ற முடியாது… மத்திய அரசு அதிரடி..!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…

18 minutes ago

“சுற்றுச்சுவர் இல்லை.. கழிவறை இல்லை” அதனால் பெண் பிள்ளைகளுக்கு அனுமதியில்லை… அரசுப் பள்ளியின் விசித்திரக் காரணத்தால் வெடித்த சர்ச்சை..!!

பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…

21 minutes ago

பள்ளிக்கூடமா..? பாலியல் கூடமா..? ஒரே பள்ளியில் 20 பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை… அரசுப்பள்ளி ஆசிரியரின் லீலைகள் அம்பலம்…!!

சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…

24 minutes ago

அடக்கடவுள..! பால்கனி சுவரில் அமர்ந்து ரீல்ஸ் எடுத்த 14 வயது சிறுவன்… அடுத்த நொடியே அரங்கேறிய கொடூரம்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

ஐதராபாத்தில் சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோ எடுக்க முயன்ற 14 வயது சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து…

29 minutes ago

“இலவசம் ஏமாற்று வேலை…!” கோவையில் அதிமுக-வை அதிர வைத்த சந்திரபாபு நாயுடு…. அப்செட்டில் வேலுமணி டீம்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஆந்திர முதல்வர்…

41 minutes ago