“அவன் தான் எனக்கு வேணும்” புதருக்குள் கிடந்த கணவன் சடலம்… போன் கால் கொடுத்த க்ளூ.. மனைவியின் மாஸ்டர் பிளான் அம்பலம்… கள்ளகாதலால் அரங்கேறிய கொடூரம்…!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ததியாவில், திருமணமான 16 ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனைக் கொலை செய்த மனைவி மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 6-ம் தேதி சிந்த நதி பாலத்தின் அடியில் புதர்களுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஹன்ஸ்ராஜ் வர்மா என்ற 35 வயது இளைஞரின் சடலமே இந்த வழக்கிற்குத் தொடக்கமாக அமைந்தது. ஆரம்பத்தில் அடையாளம் தெரியாத சடலமாக இருந்ததால் போலீஸார் அதைப் புதைத்திருந்தனர். பின்னர் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தபோது, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.

போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், ஹன்ஸ்ராஜின் மனைவி பபிதா வர்மாவுக்கும், அவரது உறவினர் ஹேமந்த் ஆர்யாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனது கணவர் மது அருந்திவிட்டுத் தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறிய பபிதா, தனது காதலனுடன் சேர்ந்து ஹன்ஸ்ராஜைக் கொல்லத் திட்டம் தீட்டினார். இதன்படி, பிப்ரவரி 5-ம் தேதி ஹேமந்த் மற்றும் அவரது நண்பர் அனில் ஆகியோர் ஹன்ஸ்ராஜை மது அருந்த அழைத்துச் சென்று, வழியிலேயே மஃப்ளரால் அவர் கழுத்தை நெரித்துக் கொன்று புதரில் வீசியுள்ளனர். செல்போன் அழைப்புத் தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், மனைவி பபிதா, காதலர் ஹேமந்த் மற்றும் கூட்டாளி அனில் ஆகிய மூவரையும் போலீஸார் தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

Soundarya

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago