பொள்ளாச்சி மாவட்டம் சோமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரகுபதி ராம் (54) என்பவருக்கு திருமணம் ஆகி வெண்ணிலா (45) என்ற மனைவி உள்ளார். ரகுபதி ராம் இன் தம்பி செந்தில் குமாரும் தனது அண்ணனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுபதிராமின் மனைவி, சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இது கணவருக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று தன் மனைவியிடம் அவர் கூறிய நிலையில் கணவன் மனைவியிடையே இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ரகுபதி ராமின் மனைவி சமையல் வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகுபதி ராம் மனைவி சமையல் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கண்டித்துள்ளார். ஆனால் தனது பேச்சை மீறி சமையல் வேலைக்குச் சென்றால் விஷம் குடித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். இருந்தாலும் அவருடைய பேச்சை மீறி மனைவி வேலைக்கு சென்றுள்ளார். இதனால் விரத்தி அடைந்த ரகுபதி ராம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். உடனே செல்போன் மூலம் மனைவியிடம் இதை கூறிய நிலையில் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி செந்தில்குமாரிடம் தகவல் அளித்துள்ளார்.
உடனே அவர் அண்ணனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற நிலையில் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் தன்னுடைய தம்பியை ரகுபதி ராம் அறிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரகுபதிராமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…