சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த செங்கல் சூளை அதிபர் பூபதி (45) என்பவர் அண்மையில் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கணவர் பூபதியைக் மர்மக் கும்பல் வழிமறித்துக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக அவரது மனைவி சுஜிதாஸ்ரீ நாடகமாடி வந்த நிலையில், அவரது முன்னுக்குப் பின் முரணான பதில்கள் காவல்துறையினருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தின.
இதையடுத்து, சுஜிதாஸ்ரீயிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், சினிமா பாணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் கொலையின் திடுக்கிடும் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. பூபதியின் தொழில் சார்ந்த நண்பர்களுடனும், எதிர்வீட்டில் வசித்து வந்த சந்தோஷ் ராஜ் என்பவருடனும் சுஜிதாஸ்ரீ திருமணம் மீறிய உறவில் இருந்துவந்துள்ளார். இந்தத் தகாத உறவைக் கண்டித்து கணவர் பூபதி அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால், அவரை வழியிலிருந்து அகற்ற சுஜிதாஸ்ரீ திட்டம் தீட்டியுள்ளார்.
சம்பவத்தன்று கணவருடன் ஏற்பட்ட தகராறில், பூபதியின் தலையில் பலமாகத் தாக்கி அவரை மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர், தனது கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜை வீட்டிற்கு வரவழைத்து, மயங்கிய நிலையில் இருந்த பூபதியை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளனர். இந்த கொடூரமான செயலில் சுஜிதாஸ்ரீ தனது 13 வயது மகனையும் ஈடுபடுத்தியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையை மறைப்பதற்காகவே காரில் செல்லும் போது மர்மக் கும்பல் தாக்கியதாக பொய்யான நாடகத்தை சுஜிதாஸ்ரீ அரங்கேற்றியுள்ளார். தற்போது இச்சம்பவம் தொடர்பாக சுஜிதாஸ்ரீ மற்றும் சந்தோஷ் ராஜ் ஆகிய இருவரையும் ஓமலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய அவர்களின் 13 வயது சிறுவன் அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…