#image_title
தமிழ் சினிமாவில் இயங்கும் தனித்தன்மை வாய்ந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ் தாணு. 1980 களில் விநியோகஸ்தராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்த அவர் அதன் பின்னர் மெல்ல மெல்ல தயாரிப்பாளராக வளர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை எடுத்தார்.
தனது படங்களை சிறப்பாக எடுத்து அதற்கு வித்தியாசமான பிரம்மாண்டமான விளம்பரத்தை செய்து படத்தை மக்களைக் கொண்டு சென்று வெற்றி பெறுபவர் தாணு. தான் தயாரித்த கபாலி படத்தின் விளம்பரத்துக்காக ஏர் இந்தியா விமானத்தில் அதன் போஸ்டரை இடம்பெறவைத்தார். அந்தளவுக்கு வித்தியாசமாக யோசிக்கக் கூடியவர்.
தாணு தயாரித்த ஒரு சில தோல்விப் படங்களில் தொட்டி ஜெயா திரைப்படமும் ஒன்று. அந்த படத்தை வி இசட் துரை இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதலில் ஜீவன்தான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்ததாம். ஆனால் இயக்குனர் துரையும் கேமராமேன் ஆர் டி ராஜசேகரும் தாணுவுக்குத் தெரியாமலேயே சிம்புவிடம் சென்று கதையை சொல்லியுள்ளனர்.
கதையைக் கேட்டதும் அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டதாம். உடனே தாணுவை நேரடியாக வந்து சந்தித்து பேசி தானே நடிக்கிறேன் எனக் கூறியுள்ளார். அப்போது தாணு சிம்புவின் தந்தையோடு தனக்கிருக்கும் மனஸ்தாபங்களை சொல்லி சரியா வருமா என தயங்கியுள்ளார். ஆனால் சிம்பு தன்னால் எந்த பிரச்சனையும் வராது என சொல்லி அவரை சம்மதிக்க வைத்தாராம். அதன்பிறகு தாணு துணிந்து அந்த படத்தை எடுத்துள்ளார். சிம்புவிடம் இருந்து சொன்னதுபோலவே எந்த பிரச்சனையும் வரவில்லையாம்.
அதுபோல படத்தின் ரிலீஸின் போது பிரச்சனை வந்தபோது சிம்பு வந்து தாணுவுக்கு ஆதரவாகவே பேசினாராம். இந்த தகவலை தாணு தான் கலந்து சாய் வித் சித்ரா நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…
சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…
மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…