#image_title
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சிவக்குமார். இவரது மகன்களான சூர்யாவும் கார்த்தியும் சினிமாவில் இப்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். கடந்த 23-ஆம் தேதி சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிலையில் அகரம் அறக்கட்டளை சார்பில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் பேசியதாவது, கால் அரைக்காசுக்கு 4 1/2 கத்திரிக்காய். ஒரு காசுக்கு எத்தனை கத்திரிக்காய் என்ற கேள்விக்கு சரியாக பதில் சொன்னால் பரிசு தருகிறேன். நான் 365 ரூபாயில் 10 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டேன். ஆனால் இப்போது கார்த்தி பையனை ப்ரீகேஜி சேர்ப்பதற்கு 2.30 லட்சம் ரூபாய் பணம் கேட்கிறார்கள். இதனை கற்பனை பண்ணி பார்த்தால் பைத்தியமே பிடித்து விடும். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் அம்மா காடு கரையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
5.25 ரூபாய் மாதம் பீஸ் கட்டியாச்சு. ஒரு வாரம் கழிச்சு என் அம்மாவிடம் சென்று பப்ளிக் எக்ஸாம் எழுதணும் அதுக்கு பணம் வேணும் என கேட்டேன். அப்போது என் அம்மா 11.50 ரூபாயை உருட்டி பெரட்டி கொடுத்தாங்க. அப்போ பேங்க் எல்லாம் கிடையாது. சட்டிக்குள் மஞ்சள் துணியை சுற்றி வைத்திருப்பார். அந்த பணத்தை தான் எடுத்துக் கொடுத்தார். ஒரு வாரம் கழிச்சு போயி என் அம்மா கிட்ட பள்ளியில் படித்த மாணவர்களும், ஆசிரியர்களும் குரூப் போட்டோ எடுக்கணும்னு சொன்னாங்க. அதுக்கு காசு வேணும்னு கேட்டேன்.
எங்க அம்மா காசு தரல. என்னுடன் பள்ளியில் படித்த மாணவர்கள் குரூப் போட்டோ எடுத்த போது நானும் சிலரும் பணம் இல்லை எனக் கூறி அங்கிருந்து கிளம்பி விட்டோம். ஆசிரியர் பணம் வேண்டாம் என கூறிய பிறகும் விருப்பம் இல்லாமல் அங்கிருந்து வந்து விட்டோம். இப்போ வரை குரூப் போட்டோ பார்த்தால் எனக்கு உறுத்தலாகவே இருக்கும். இந்த டிஜிட்டல் கேமரா வந்துவிட்டது. அன்று பிலிம் கேமரா தான் இருந்தது. இதுவரை 170-க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துள்ளேன் என பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…
மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி…
ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 'வி கிராண்ட்' ஹோட்டல் அறையில், 26 வயது மதிக்கத்தக்க ரேணுகா…
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன்…
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்தும், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை…