#image_title
தமிழ் சினிமா பாடல் ஆசிரியர்களில் மிகவும் தனித்துவம் மிக்க ஒருவர் பாடல் ஆசிரியர் கபிலன். 2000 களின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை பிஸியான பாடல் ஆசிரியராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜய்க்கு அறிமுக குத்து பாடல் எழுதினாலும், அழகான மெலடி எழுதினாலும் இரண்டிலும் தன்னுடைய முத்திரையைப் பதிப்பார்.
இளையராஜா முதல் தற்போதைய அனிருத், ஷான் ரோல்டன் வரை அனைவருக்கும் பாடல் எழுதியுள்ள அவர் ஒவ்வொரு இசையமைப்பாளரோடும் பணியாற்றிய அனுபவங்களையும் அவர்களோடு நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் பகிர்ந்துள்ளார்.
அப்படி இளையராஜாவிடம் தான் ஒரு வார்த்தையை தவறாக சொல்லிவிட்டு கிண்டல் அடிக்கப்பட்டதை பகிர்ந்துள்ளார். அதில் “ஒருநாள் இளையராஜா கம்போஸிங்குக்கு போயிருந்தேன். பாடல் வரிகள் கிடைக்கவில்லை. நான் எழுதி எடுத்துவருகிறேன் என சொல்லிவிட்டு சென்றேன். மறுநாள் காலையில் லேட்டாக சென்றேன்.
அவரிடம் நான் இதை சொல்லி இருக்கக் கூடாது. சார் இங்க முடிஞ்சதும் வேறு சில இசையமைப்பாளர்கள்கிட்ட போய் அங்கயும் பாட்டு எழுதிட்டு வர்றேன், அதான் லேட்டாயிடுச்சுன்னு சொன்னேன். அதைக் கேட்ட அவர் ‘பெரிய பெரிய ஆளுங்களுக்கு எல்லாம் எழுதுறீங்க. எனக்கு எழுதுவீங்களா’ என ஜாலியாகக் கலாய்த்துவிட்டார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.” எனப் பகிர்ந்துள்ளார்.
மேலும் பாடல் வரிகள் எழுதும்போது “ராஜா சார் ட்யூன் என்றால் ட்யூன்தான். அதுக்குள்தான் எழுத வேண்டும். அவரிடம் அரச்சொல் கூடாது, கவிதைத் தனமாக எழுதக் கூடாது.’ என்று சொல்வார். என்னிடம் “யோவ், நான் பாமரன்யா, எனக்கேத்த மாதிரி எழுது. இந்த கவித்துவம் எல்லாம் கமல்ஹாசன் கிட்ட போய் எழுது. என்கிட்ட வச்சிக்காத.” என சொல்லிவிடுவாராம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…