#image_title
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான ஆரி தனது மகனின் முதலாவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சங்கர் தயாரிப்பில் வெளியான ரெட்டை சுழி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் ஆரி. இந்த திரைப்படத்தில் இயக்குனர் பாலச்சந்திரரும், பாரதிராஜாவும் இணைந்து நடித்திருப்பார்கள். இருப்பினும் இந்த திரைப்படம் ஆரிக்கு பெரிய அளவுக்கு கை கொடுக்கவில்லை.
பின்னர் 2014 ஆம் ஆண்டு ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான நெடுஞ்சாலை திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. பின்னர் நயன்தாராவுடன் இணைந்து மாயா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் பிக் பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஆரி இறுதிவரை சிறப்பாக விளையாடி டைட்டிலையும் வென்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். ஆரிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர் இலங்கை தமிழ் பெண்ணான நதியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஏற்கனவே ரியா என்கின்ற பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் மீண்டும் கடந்த வருடம் ஆண் குழந்தைக்கு அப்பாவானார் ஆரி.
இந்நிலையில் அந்த குழந்தையின் முதல் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பிக் பாஸை சேர்ந்த சனம் செட்டி, சுரேஷ் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…