தமிழக அரசு ஹாஸ்பிடல்களில் இன்று முதல் நோயாளிகள், அவர்களின் உறவினர்களுக்கு 24 மணி நேரமும் அடையாள அட்டை கட்டாயம் என மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் முறை மற்றும் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு வசதிகளை அமல்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ப. செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகங்களுக்குள் அந்நிய நபர்கள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கவும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி, மருத்துவமனைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, தேவைப்படும் இடங்களில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தடையற்ற கண்காணிப்பு உறுதி செய்யப்படும். மேலும், மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், மருத்துவமனை வளாகத்திற்குள் வருபவர்களைக் கட்டுப்படுத்த முறையான நுழைவுச் சீட்டு அல்லது அடையாள அட்டைகளை கட்டாயமாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் இதர கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களிலும் பாதுகாப்பு ஓட்டைகள் இல்லாதவாறு தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…