Connect with us

CINEMA

உயிரோட இருக்கும்போதே அவர காலிபண்ணிட்டு, இப்ப ஏன் நடிக்குறீங்க..? குமுறிய விஜயகாந்தின் தம்பி மற்றும் அவரது மனைவி..

தேமுதிக தலைவர், நடிகர் கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். மதுரையில் அவரது பூர்வீக வீடு ஆண்டாள் அழகர் இல்லம் உள்ளது. அங்கு அவரது சொந்த தம்பி மற்றும் அவரது குடும்பம் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் ஒரு நேர்காணலில் பங்கேற்றனர். அப்போது கேப்டனின் தம்பி மனைவி கூறியதாவது, நாங்கள் அவரை பாவா என்றுதான் அழைப்போம். சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் வரை அடிக்கடி இந்த வீட்டுக்கு வருவார். இதுதான் அவர் பிறந்து வளர்ந்து வீடு. அதனால் இந்த வீட்டின் பூர்வீகத்தை இழக்க கூடாது என்று நாங்கள் இந்த வீட்டிலேயே இருக்கிறோம். மற்றவர்கள் சென்னை, பெங்களூரு என செட்டிலாகி விட்டனர்.

   

கடைசியாக மதுரைக்கு கட்சி ஆபீஸ்க்கு வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தவர் வீட்டுக்கு வரவில்லை. 12 வகையான காய்கறிகளுடன் சாப்பாடு செய்துக்கொண்டு போய் கட்சி ஆபீஸில் கொடுத்துவிட்டு பேசி விட்டு வந்தோம். அவர் ஒருமுறை வந்த போது என் பிள்ளைகள், சொந்த பந்த பிள்ளைகளுக்கு சைக்கிள்கள் வாங்கி கொடுத்தார். இரவு வீட்டில் சமைக்க வேண்டாம் என ஓட்டலில் இருந்து பிரியாணி, இட்லி, தோசை, பரோட்டா என ஆர்டர் செய்து வரவழைத்துக் கொடுத்தார். அவர் நோய்வாய்ப்பட்ட பிறகும் பலமுறை அவரை சென்னையில் சென்று பார்த்துவிட்டு வருவோம். அவர் பேச முடியாமல் போனாலும், எங்களை எல்லாம் பார்த்தால் சந்தோஷப்படுவார். எங்கள் அனைவரின் உயிராக தான் அவர் இருந்தார். சொந்த பந்தங்கள் மீது எப்போதுமே பாசமாக, அன்பாக இருப்பார்.

ஆனால் இந்த மீடியாக்காரர்கள் அவரை ரொம்பவும் கேவலப்படுத்தி விட்டனர். உயிரோடு இருந்த போது அவரை மிகவும் மட்டம்தட்டி, கேவலப்படுத்தி எழுதினர். அதனால் உயிரோடு இருக்கும் போதே அவரை கொன்றுவிட்டனர். ஆனால் இப்போது இறந்த பிறகு அவரை தலையில் தூக்கி வைத்து பேசுகின்றனர். 3 மாதங்களுக்கு முன் விஜயகாந்த் இறந்துவிட்டார் என்றே சில மீடியாவில் கூறிவிட்டனர்.

இந்த அதிகாரம் யார் அவர்களுக்கு கொடுத்தது. இது எங்களை மிகவும் வருத்தப்படுத்தியது. அவர் இறந்த போது, நாங்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு மீடியாக்காரர்கள் கூட்டம் இருந்தது. இப்போது அந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிற அந்த மனுஷனை வாழும்போதும் நீங்கள் நல்ல விதமாக சொல்லி இருக்கலாம் என்பதுதான் எங்களது வேதனையாக உள்ளது, என்று அவர் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top