லோகேஷ் கனகராஜ் இயக்கிய “கைதி”, “விக்ரம்”, “லியோ” ஆகிய திரைப்படங்கள் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU) என்ற திரைப்பட வரிசையில் அமைந்திருந்தது. ஹாலிவுட்டில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போல் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்கும் அதிகளவு வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் இயக்குனர் ஹரி “ரத்னம்” திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் சில நாட்களாவே மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேன்னலுக்கு இயக்குனர் ஹரி பேட்டியளித்தார்.
அப்போது நிருபர் அவரிடம், “சிங்கம் 3” திரைப்படத்தில் “சிங்கம் 2” திரைப்படத்தின் கிராஸ் ஓவரை குறிப்பிட்டு. “இப்போது நிறைய படங்களில் கிராஸ் ஓவர் என்ற விஷயம் வருகிறது. ஆனால் நீங்கள் அப்போதே அதை செய்திருக்கிறீர்களே?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் ஹரி, “நீங்கள் சொன்ன பிறகுதான் நான் அதனை சிந்தித்துப் பார்க்கிறேன். நான் என்றைக்கும் கடந்த போன விஷயங்களை திரும்பி பார்க்க மாட்டேன். வேலை என்று வந்துவிட்டால் அதில் மட்டுமே கவனம் இருக்கும்” என்று கூறிய ஹரி,
“சிங்கம் 3 திரைப்படத்தில் சாமி படத்தின் ஆறுச்சாமியும் துரைசிங்கமும் சந்திப்பது போன்று ஒரு காட்சியை எழுதியிருந்தேன். ஆனால் அந்த காட்சியை படமாக்க எங்களுக்கு நேரமும் அமையவில்லை சூழலும் அமையவில்லை. ஆதலால் அந்த காட்சியை படமாக்க முடியவில்லை. இப்போது லோகேஷ் கனகராஜ் அதனை செய்யும்போது நன்றாக ஒர்க் ஆகிறது. அதை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக தரப்பிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணி…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில்…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…
சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…