Connect with us

CINEMA

ரஜினி, விஜய்க்கு மறுக்கப்பட்ட அனுமதி.. சிவகார்த்திகேயனுக்கு மட்டும் கிடைத்தது எப்படி..? அவப்பெயரை அழிக்க காத்திருக்கும் SK..

தமிழ் சினிமாவில் இப்போதைக்கு உச்ச நட்சத்திரங்கள் என்ற அடையாளத்தில் இருப்பவர்கள் ரஜினி, கமல், விஜய் மட்டுமே. இனிமேல் இந்த லிஸ்ட்டில் அஜீத் வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஏனென்றால், கேப்டன் விஜயகாந்த் மறைவு குறித்து அவர் அநாகரிகமாக நடந்துகொண்ட விதம், அஜீத் ரசிகர்கள் மத்தியிலேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், கேப்டன் மறைவுக்கு துக்கம் விசாரிக்க நள்ளிரவு 3 மணிக்கு, கேப்டன் வீட்டுக்கு வருவதற்கு அவரது குடும்பத்தாரிடம் அனுமதி கேட்ட செயல், மிக அசிங்கமாக பார்க்கப்படுகிறது.

   

இதற்கு அவர் தரப்பில் சொன்ன காரணம், அங்குள்ள ரசிகர்கள் அவரை பார்க்க திரண்டு வந்துவிட்டால், அவருக்கு அலர்ஜி ஏற்பட்டு விடும் என்பதுதானாம். அதனால் டாப் ஸ்டார் நடிகர்களாக தமிழ் சினிமாவில் தகுதியான நடிகர்களாக ரஜினி, கமல், விஜய் ஆகியோரை மட்டுமே குறிப்பிட வேண்டும். அதுதான் நியாயமாகவும் இருக்கும். அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படமும், அதைத்தொடர்ந்து விஜய் நடித்த லியோ படமும் கடந்தாண்டில் வெளியானது. ரஜினி, விஜய் நடித்த இந்த படங்களுக்கு தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஜெயிலர், லியோ இரண்டு படங்களுமே காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது. சிறப்பு காட்சி 9 மணிக்கும், அடுத்த ரெகுலர் காட்சிகளை தொடர்ந்தும் திரையிட்டு, இரவு 1.30 மணி்ககுள் அனைத்து காட்சிகளையும் முடித்துக்கொள்ள தமிழக அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. விதிமுறை மீறினால் தியேட்டர் நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்தது.

ஆனால் இப்போது பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் அயலான் படத்துக்கு அதிகாலை காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ரஜினி, விஜயை விட சிவகார்த்திகேயன் பெரிய நடிகரா, என்ற கோபம் ரஜினி, விஜய் ரசிகர்களுக்கு இதனால் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ரஜினி, விஜய்க்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இரட்டை நிலைப்பாட்டில் இந்த அரசு இருப்பது சரியல்ல, என்றும் விமர்சிக்கின்றனர்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top