Categories: சினிமா

கவுண்டமணி செந்தில் பிரிந்துவிட்டார்களா?… இருவருக்கும் நெருக்கமான நபர் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளனர். முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் செந்தில் ஆசைப்படவில்லை. நாடகங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

அப்போது அவரின் வெகுளித்தனம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை வைத்து சுற்றி இருப்பவர்கள் எல்லாம் காமெடியாக அவரை கேலி செய்வார்களாம். அதைப் பார்த்து பாக்யராஜ் தன்னுடைய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்களைக் கொடுத்தார். தூறல் நின்னு போச்சு படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்த போது நன்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதாராம்.

கவுண்டமணியோடு அவர் உதயகீதம் மற்றும் வைதேகி காத்திருந்தாள் போன்ற இணைந்து நடித்த போது அந்த இணையின் மீதான கவனம் ரசிகர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அதன் பின்னர் கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டது அவர்களின் நகைச்சுவை. இருவரும் இணைந்து நடித்தாலும் சம்பளத்தைப் பொறுத்தவரை கவுண்டமணிக்குதான் அதிகமாக தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களாம்.

செந்தில் கவுண்டமணி அண்ணனுக்கு கொடுப்பதில் பாதியை எனக்குக் கொடுங்கள் என வாங்கிக் கொள்வாராம். இப்படி 25 வருடங்களுக்கு மேலாக இணைந்திருந்த அவர்கள் கடைசி 15 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து நடிக்கவில்லை. அதன் பின்னர் தனித்தனியாக படங்களில் நடித்தாலும் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் இதுபற்றி இருவருக்கும் மிகவும் நெருக்கமானவரான நகைச்சுவை எழுத்தாளர் சாய் ராஜகோபால் பேசியுள்ளார். அதில் “இருவரும் பிரியவே இல்லை. இப்போதும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கவுண்டமணி சார் சில படங்களில் செந்திலோடு நடிப்பார். சில படங்களில் செந்தில் இல்லாமல் நடிப்பார். கதையப் பொறுத்து கதாநாயகனோடு ட்ராவல் பண்ணுவது போல நடிப்பார். ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் கூட நான் செந்திலை நடிக்க வைக்கலாம் என நினைத்தேன்.

ஆனால் அவர் புது காம்பினேஷனாக இருக்கட்டும். யோகி பாபுவை போடலாம் என்றார். இதுவும் கிட்டத்தட்ட கவுண்டமணி செந்தில் ஸ்டைல்தான். என்ன செந்திலுக்குப் பதில் யோகி பாபு வருவார்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

44 seconds ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

1 minute ago

“அந்த ஒரு காரணத்திற்காக” பால்கனியிலிருந்து ரூ.25 லட்சத்தை அள்ளி வீசிய கணவன்… அதிர்ஷ்ட மழையில் நனைந்த வழிப்போக்கர்கள்… வைரலாகும் வீடியோ..!!

சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற…

25 minutes ago

“கல்யாணம் பண்ணிக்கிறேன்…” 5 சிறுமிகளுக்குத் துரோகம் செய்த வேட்டை தடுப்பு காவலர்…. ஊட்டியில் அதிரடித் தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், பள்ளி மாணவிகள் 5 பேரைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய முன்னாள் ஊர்க்காவல் படை வீரர்…

38 minutes ago

“நகைக்கடன் வாங்குறீங்களா…?” வட்டியை பாதியாகக் குறைக்கும் கோல்டு ஓவர்ட்ராஃப்ட்… முழு விவரம் இதோ…!!

அவசர கால பணத்தேவைக்கு நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுபவர்களுக்கு 'கோல்டு ஓவர்ட்ராஃப்ட்' சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளது. வழக்கமான நகைக்கடனில்…

45 minutes ago