“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், ரித்தி யாதவ் என்ற இரண்டு வயதுக் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்து, அந்தக் குழந்தையின் ஒட்டுமொத்த உலகத்தையே புரட்டிப் போட்டுள்ளது.

விபத்திற்குப் பிறகு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமி, தனது தாய் அருகில் இல்லாததை உணர்ந்து “அம்மா… அம்மா…” என்று கதறி அழுத காட்சி காண்போர் நெஞ்சை உலுக்கியது. “அழாதே கண்ணா, அம்மா இதோ வந்துவிடுவார்” என்று அங்கிருந்த காவலர்கள் ஆறுதல் கூறியும், எதையும் அறியாத அந்தப் பிஞ்சு குழந்தை தனது தாயைத் தேடி அழுதுகொண்டே இருந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கலங்கச் செய்துள்ளது.

உயிரிழந்தவர்கள் குழந்தையின் பெற்றோர் மற்றும் ஒரு உறவினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் அந்தக் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், விபத்தின் கோரத்தையும், தாய்-தந்தையை இழந்து தவிக்கும் அந்தக் குழந்தையின் நிலையும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Soundarya

Recent Posts

திமுக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்… முதலமைச்சர் விஜய்யுடன் கைக்கோர்த்த வைகோ.. அதிரடி திருப்பம்..!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

46 seconds ago

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய CM விஜய்.. அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் நண்பர்கள்..? தலைமைச் செயலகத்தில் அறை ஒதுக்கப்பட்ட பின்னணி என்ன..? வில்சன் கேள்வி..!!

தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பின் போது எடுத்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்…

5 minutes ago

ஒரு ஸ்ட்ராவால் வந்த வினை..! கல்லூரி மாணவனுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபாயம்.. சிங்கப்பூர் போலீஸ் அதிரடி..!!

சிங்கப்பூரில் கல்வி பயின்று வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வணிகவியல் மாணவரான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மாக்ஸிமிலியன் என்பவர், அங்குள்ள…

19 minutes ago

கோயில் வளாகத்திற்குள்ளேயே பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை… நடந்தது என்ன..? உறைந்துபோன கிராம மக்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான பிட்டு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…

27 minutes ago

ATM கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்டுங்க.. அமைச்சர் சரத்குமாருக்கு கீதாஜீவன் சவால்…!!

தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…

32 minutes ago

“பெத்தவங்களை கஷ்டப்படுத்துறத விட கொல்லுறதே மேல்” இதுதான் ஈஸியான வேலை.. புனே கொலை வழக்கில் மணப்பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…!!

புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…

33 minutes ago