சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற கணவன், வீட்டில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து பால்கனி வழியாக தெருவில் வீசத் தொடங்கினார். சுமார் 25,00,000 ரூபாய் (2,10,000 யுவான்) மதிப்பிலான நோட்டுகள் வானத்திலிருந்து மழை போல கீழே கொட்டியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தெருவில் ப
ணம் சிதறி கிடப்பதைக் கண்ட வழிப்போக்கர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து பணத்தைச் சேகரிக்கத் தொடங்கினர். சிலர் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட முயன்றாலும், அங்கிருந்த மற்றவர்கள் தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிதறிக் கிடந்த பணத்தைப் பாதுகாப்பாக மீட்டனர். அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர் போலீசார் மற்றும் அப்பகுதி மக்களின்The husband who threw money The husband who threw moneyஉதவியுடன் சுமார் 18,00,000 ரூபாய் வரை மீட்கப்பட்டு அந்த தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. எஞ்சிய ஒரு பகுதி பணம் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. உணர்ச்சிவசப்பட்டு தம்பதியினர் செய்த இந்த வினோதமான செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…