பவதாரணி மறைவு செய்தியை கேட்டு வெங்கட் பிரபுவிடம் விஜய் சொன்ன வார்த்தை.. இணையத்தில் கசிந்த தகவல்..

By Archana

Published on:

நடிகர் விஜய், அரசியலில் கூடிய விரைவில் அடி எடுத்து வைக்கப் போகிறார் என்று பேசிவரும் நிலையில், அவரோ, அரசியலைக் காட்டிலும் சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் நடித்து பிசியாகவே இருந்து வருகிறார். படப்பிடிப்புகளில் இருந்து ஓய்வு கிடைக்கும் போது தான் அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகிறார். அவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி அடைந்த நிலையில், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். சையின்ஸ் பிக்சன் ஜானரில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன், யோகி பாபு, பிரஷான், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, சினேகா, லைலா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

GD3JI5QaoAAcFrm

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற இருப்பதாக இருந்தது. ஆனால் வெங்கட்பிரபுவின் கோரிக்கைக்கு ஏற்ப அந்தப் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், அதற்கு விஜய்யும் ஓகே சொல்லி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜாவின் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரணி கடந்த 27-ம் தேதி புற்றுநோய்க்காக இலங்கை சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போனார். அவரது உடல் தேனி மாவட்டத்தில் அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோரது சமாதிகளுக்கு நடுவே நல்லடக்கம் செய்யப்பட்டது. பவதாரணியின் இழப்பை, வெங்கட்பிரபுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

   
100418383

யுவன், கார்த்திக் ராஜா, பவதாரணி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. அத்தோடு பவதாரணியின் இறுதி அஞ்சலியில் வெங்கட்பிரபுவும் கண்ணீர் மல்க இருந்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். இலங்கையில் கோட் படத்தின் படப்பிற்காக படக்குழு கிளம்பிய போது இந்த துயர சம்பவம் நடந்ததால், விஜய் நிலைமை சரியான பிறகு படப்பிடிப்பை தொடரலாம் என கூறிவிட்டாராம். அத்தோடு இலங்கையில் மீண்டும் படப்பிடிப்பை தொடர்ந்தால், வெங்கட்பிரபுவுக்கு பவதாரணியின் நினைவும் அதிகம் வரும் என்பதால், இலங்கை படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, அங்கு எடுக்க வேண்டிய காட்சிகளை, துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் தொடர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Snapinstaapp 423131687 18407883433036014 2704257995214050537 n 1080
author avatar
Archana