மத்தியப் பிரதேச மாநிலம் மொரினாவில், ஜாமீன் வழங்குவதற்குப் பதிலாக “ஜெயிலுக்குப் போ அல்லது பணம் கொடு” என்று கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் உதவி ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் மொரினாவில் உள்ள சபல்கர் காவல் நிலையத்தில் நடந்துள்ளது. அங்கு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் ராம்பாபு நிபோரியா என்பவர், மணிஷ் என்ற குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் ஜாமீன் வழங்குவதற்காக லஞ்சம் கோருவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கிராமம் ஒன்றில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், மணிஷ் மௌர் உள்ளிட்ட சிலர் மீது தாக்குதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு வந்தபோது, உதவி ஆய்வாளர் ராம்பாபு நிபோரியா, “ஒன்று சிறைக்குச் செல்லுங்கள் அல்லது பணம் கொடுங்கள், உங்களை இங்கேயே விட்டுவிடுகிறேன்” என்று மிரட்டியுள்ளார். இதனை அங்கிருந்த புகார்தாரர் தனது மொபைல் போனில் ரகசியமாகப் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடியோ வைரலானதை அடுத்து, மொரினா எஸ்பி பகீர் வீடியோ!(SP) தர்மராஜ் மீனா இந்த விவகாரத்தை உடனடியாகக் கையில் எடுத்தார். முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு தீவிரமானது எனத் தெரிந்ததை அடுத்து, உதவி ஆய்வாளர் ராம்பாபு நிபோரியாவை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றும், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பயணத்தின் போது 3 பேர் மட்டுமே…
மும்பை ஜோகேஷ்வரி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் நாகேஷ் மோஹிதே, ஓடிக்கொண்டிருந்த…
கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகாவிற்குட்பட்ட அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்தி குமார் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.…
ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…
தெற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று,…
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஈ-ரிக்ஷா ஒன்றிற்குள் பெண் ஒருவர் ஆபத்தான…