“ஜாதி பேரை சொல்லி தான் வெட்டுனாங்க!”.. அடுத்தடுத்து 7 பேரை சரித்து தள்ளிய கஞ்சா கும்பல்.. பாதிக்கப்பட்டவரின் பகீர் வாக்குமூலம்..!!

Spread the love

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில், கடந்த மே 29ஆம் தேதி முகமூடி அணிந்த கும்பல் ஒன்று திருமண வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அரிவாளால் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய அதே கும்பல், தொடர்ந்து நெல்லை மாவட்டம் மானூர் அருகே தெற்குப்பட்டி பகுதியிலும் வீதியில் நின்றிருந்த இருவரைத் தாக்கியுள்ளது. இந்த அடுத்தடுத்த வன்முறைச் சம்பவங்களில் ரமேஷ், அருள்மாறன், சந்தோஷ்குமார், ராம்குமார், முபாரக் மற்றும் அப்துல் ரகுமான் உட்பட மொத்தம் ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் உடனடியாகத் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், வன்முறையில் ஈடுபட்ட மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதற்கிடையில், தாக்குதலில் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருள்மாறன் என்பவர் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சம்பவத்தன்று ஐந்து இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 10 பேரில், 8 பேர் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்கள் வீட்டின் முன்பு பேசிக்கொண்டிருந்த தங்களை திடீரென அரிவாளால் வெட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அருள்மாறன் அளித்த வாக்குமூலத்தின்படி, திருமணத்திற்காகப் பேனர் வைத்தபோது ஒரு சிறுவன் வந்து தகராறு செய்ததாகவும், அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பிய நிலையில் அவன் மீது சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் அந்தச் சிறுவனைப் பிடித்து விசாரித்தபோது, ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆட்களைத் திரட்டி வந்து இந்தத் தாக்குதலை நடத்தியதை ஒப்புக்கொண்டான். மேலும், தாக்குதலின் போது அக்கும்பல் கஞ்சா போதையில் இருந்ததாகவும், சாதிப் பெயரைக் குறிப்பிட்டே தங்களைத் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே இப்பகுதிகளில் இரண்டு முறை அரிவாள் வெட்டுத் தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், மீண்டும் அதே போன்றதொரு தொடர் தாக்குதல் அரங்கேறியுள்ளது தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற வன்முறைகள் கஞ்சா போதையிலேயே அதிகம் நடப்பதால், உடனடியாகப் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கக் காவல் துறையினர் உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Muthu Mani

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

4 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

4 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

4 மணத்தியாலங்கள் ago