“சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி தா…” வாலிபரை துடிதுடிக்க குத்தி கொன்ற கும்பல்…! டாஸ்மாக் கடை அருகே பயங்கர சம்பவம்…!!

Spread the love

தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரான புவனி, தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த சிலர், சிகரெட் பற்ற வைப்பதற்காகப் புவனியிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர். அதற்குப் புவனி தீப்பெட்டி தர மறுத்ததால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றிப் பயங்கர மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், கண் இமைக்கும் நேரத்திற்குள் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்துப் புவனி மற்றும் அவரது நண்பர் ஆயிஷ் ராமைச் சரமாரியாகக் குத்திச் சாய்த்தது.

இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சரிந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓடிவந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட புவனி சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலிஸார், கொலையில் தொடர்புடைய நரேஷ், தருண் உட்பட 3 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

முதலீடா… இல்ல ரீல்ஸ் படப்பிடிப்பா?….. “தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள்”…. லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த TRB ராஜா…..!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…

21 minutes ago

கவுன், நெயில் பாலிஷ், லேடீஸ் செருப்பு… போலீசாரையே அரள வைத்த “அழகி”….. கையில் குழந்தையுடன் தப்பிய நபர்…. மேலாடையை விலக்கியதும் காத்திருந்த அதிர்ச்சி….!

பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் உள்ள முலுங்கு காட்டுப்பகுதியில் 48 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, தொடர்…

28 minutes ago

“கலைஞரோட திமுக முடிஞ்சுபோச்சு”… ஸ்டாலின், உதயநிதி பற்றி கே.என்.நேரு பேசிய ரகசியம்…. வெடி குண்டை தூக்கி போட்ட துரை வைகோ…..!

தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி எதிர்பாராத திருப்பங்களையும், கடுமையான கூட்டணி மாற்றங்களையும் சந்தித்துள்ளது. நீண்டகாலமாக பலமாக இருந்த…

37 minutes ago

ராமதாஸுக்குப் பிறகு இவர் தானா?…. சேலத்தில் உதயமான புது கட்சி….. ஆளுங்கட்சிக்கு ஆபத்தா?…. திடீரென கிளம்பிய புதிய அரசியல் புயல்….!

சேலம் சூரமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் "மாவீரர் மக்கள் கழகம்" என்ற புதிய அரசியல் கட்சியின் தொடக்க விழா எழுச்சியுடன்…

43 minutes ago

’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’…. ராகுல் காந்திக்கு பேரதிர்ச்சி அளித்த ஸ்டாலின்… உருவானது 3வது அணி…!

கடந்த கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மிகச் சிறந்த கூட்டணித் தோழனாகத் திகழ்ந்த திமுக, தற்போது தேசிய அரசியலில் ஒரு…

48 minutes ago