’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’…. ராகுல் காந்திக்கு பேரதிர்ச்சி அளித்த ஸ்டாலின்… உருவானது 3வது அணி…!

Spread the love

கடந்த கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மிகச் சிறந்த கூட்டணித் தோழனாகத் திகழ்ந்த திமுக, தற்போது தேசிய அரசியலில் ஒரு அதிரடிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் முன்மொழிந்தது முதல், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தாராளமாகத் தொகுதிகளை ஒதுக்கியது வரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மீது மாறா நம்பிக்கை கொண்டிருந்தார். இருப்பினும், தேர்தலில் திமுக பின்னடைவைச் சந்தித்த சூழலில், புதிதாக உருவெடுத்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கரம் நீட்டியது திமுகவிற்கு பேரதிர்ச்சியை அளித்தது. ராகுல் காந்தி நேரடியாகச் சென்னை சென்று விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்றது, பல தசாப்தகால நட்பை முறித்துக் கொண்டதோடு திமுகவிற்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆட்சியில் இருந்தபோது பாஜக தந்த பல்வேறு அரசியல் அழுத்தங்களையும் பொருட்படுத்தாமல் காங்கிரஸ் கட்சியைத் தோளோடு தோள் நின்று தாங்கிய திமுக, காங்கிரஸின் இப்போக்கை மிகக் கடுமையான துரோகமாகவே பார்க்கிறது. வரவிருக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில், அரசியல் எதிரியான பாஜகவை வீழ்த்துவதை விட, கூடவே இருந்து முதுகில் குத்திய காங்கிரஸிற்குத் தகுந்த பாடம் புகட்டுவதே பிரதான இலக்கு என்று திமுக உறுதிகொண்டுள்ளது. இதன் விளைவாக, காங்கிரஸ் முதன்மையாக அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டாணிக்கு மாற்றாக, தேசிய அளவில் வலுவான மூன்றாவது அணியைக் கட்டமைக்கும் வியூகத்தை திமுக இப்போதே தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.

இந்த தேசிய அளவிலான அரசியல் நகர்வைச் சாத்தியப்படுத்த, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி களமிறக்கப்பட்டுள்ளார். இதற்காக மும்பை சென்ற கனிமொழி, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்துப் பேசியது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி மற்றும் காக்ரோச் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்து மூன்றாவது அணி அமைப்பதற்கான ஆலோசனைகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். காங்கிரஸை முற்றிலும் ஓரங்கட்டி, பிராந்தியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் திமுகவின் இந்த நடவடிக்கை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

திமுகவின் இந்த அதிரடி மாற்றத்தைக் கண்டு மதிமுக எம்.பி. துரை வைகோ போன்ற தோழமைக் கட்சித் தலைவர்கள், ‘இந்தியா’ கூட்டணியை உடைக்க திமுக முயல்வதாகக் பகிரங்கமாகக் கவலை தெரிவித்துள்ளனர். எனினும், தேசிய அரசியலில் தங்களின் இருப்பையும் செல்வாக்கையும் மறுவரையறை செய்யத் துடிக்கும் திமுக, தங்களின் முடிவில் மிகத் தீவிரமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் உள்ள நிலையில், 2029 தேர்தலை நோக்கி திமுக முன்னெடுக்கும் இந்த ‘மூன்றாவது அணி’ முயற்சி, இந்திய அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகளையும் மிகப்பெரிய திருப்புமுனைகளையும் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Nanthini

Recent Posts

“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…

9 minutes ago

“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…

17 minutes ago

முதலீடா… இல்ல ரீல்ஸ் படப்பிடிப்பா?….. “தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள்”…. லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த TRB ராஜா…..!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…

47 minutes ago

கவுன், நெயில் பாலிஷ், லேடீஸ் செருப்பு… போலீசாரையே அரள வைத்த “அழகி”….. கையில் குழந்தையுடன் தப்பிய நபர்…. மேலாடையை விலக்கியதும் காத்திருந்த அதிர்ச்சி….!

பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் உள்ள முலுங்கு காட்டுப்பகுதியில் 48 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, தொடர்…

54 minutes ago

“கலைஞரோட திமுக முடிஞ்சுபோச்சு”… ஸ்டாலின், உதயநிதி பற்றி கே.என்.நேரு பேசிய ரகசியம்…. வெடி குண்டை தூக்கி போட்ட துரை வைகோ…..!

தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி எதிர்பாராத திருப்பங்களையும், கடுமையான கூட்டணி மாற்றங்களையும் சந்தித்துள்ளது. நீண்டகாலமாக பலமாக இருந்த…

1 மணத்தியாலம் ago