தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய்யை, ஆரம்பக் கட்டத்தில் கடுமையாக விமர்சித்தவர்களில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸும் ஒருவர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அனுபவம் கொண்ட அவர், ‘விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறாது’ எனப் பல்வேறு மேடைகளில் சாடியிருந்தார். இருப்பினும், 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தவெக தலைவரான விஜய், தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அரசியல் களத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
விஜய்யின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த கருணாஸ், விஜய்யைப் பற்றிய தனது பார்வையை முற்றிலும் மாற்றிக் கொண்டு நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதில், “‘திருமலை’ படப்பிடிப்பு காலத்தில் இருந்தே நான் விஜய் சாருடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன். அரசியல் ரீதியாக அவரை நான் கடுமையாக விமர்சித்த போதிலும், என்னை நேரில் சந்தித்தவுடன் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இன்றி ‘உங்க பையன் எப்படி இருக்கார்?’ என்றுதான் அன்புடன் நல விசாரித்தார்” என விஜய்யின் பெருந்தன்மையான பண்பை வியந்து பாராட்டியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “அரசியல் வேறு, கலைத்துறை சார்ந்த உறவுகள் வேறு” என்பதைத் தெளிவுபடுத்தினார். “எங்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா ஆகியோருக்குப் பிறகு இப்போது விஜய் முதலமைச்சராகியிருக்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயம். அதுமட்டுமின்றி, நடிகர் சங்கத்திற்காக ரூ. 1 கோடி நன்கொடை அளித்தவர் அவர். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி, திரையுலகின் மூத்த கலைஞர் என்ற முறையில் அவருக்கு என் வாழ்த்துகள்” எனத் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…
கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ள நிலையில், வீட்டில் தனியாக இருந்த மனைவி தனது பழைய காதலனை இரகசியமாக வீட்டிற்கு…
முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…
பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் உள்ள முலுங்கு காட்டுப்பகுதியில் 48 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, தொடர்…
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி எதிர்பாராத திருப்பங்களையும், கடுமையான கூட்டணி மாற்றங்களையும் சந்தித்துள்ளது. நீண்டகாலமாக பலமாக இருந்த…