ராமதாஸுக்குப் பிறகு இவர் தானா?…. சேலத்தில் உதயமான புது கட்சி….. ஆளுங்கட்சிக்கு ஆபத்தா?…. திடீரென கிளம்பிய புதிய அரசியல் புயல்….!

Spread the love

சேலம் சூரமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் “மாவீரர் மக்கள் கழகம்” என்ற புதிய அரசியல் கட்சியின் தொடக்க விழா எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவராக கரூரைச் சேர்ந்த பாஸ்கர், பொதுச் செயலாளராக தர்மபுரியைச் சேர்ந்த சரவணன் மற்றும் பொருளாளராக இருதய சாமி ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அமைப்பின் அதிகாரப்பூர்வக் கொடியும் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவரது கொள்கைகளைப் பின்தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இப்புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

கட்சித் தொடக்கத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கழகத் தலைவர் கரூர் பாஸ்கரன், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தீவிர ஆலோசனை நடத்தி, சாமானிய மக்களின் உண்மையான குரலாக விளங்கும் நோக்கில் இக்கட்சியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். தேர்தலை மட்டுமே பிரதான இலக்காகக் கொள்ளாமல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று நிர்வாகிகளை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியலில் மாற்றுப் பாதையையும் நல்ல மாற்றத்தையும் விரும்புவோர் தங்களது கழகத்தில் இணைந்து செயலாற்றலாம் என்றும் அவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.

மருத்துவர் ராமதாஸ் கிராமங்கள் தோறும் சென்று பரப்பிய சமூகநீதிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டே இக்கட்சியைத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டில் ஆட்சி மாறினாலும் இன்னமும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தீரவில்லை என்று ஆதங்கம் தெரிவித்தார். இன்றைய அரசியல் வணிகமயமாகிவிட்டதாகவும், தற்போதைய அமைச்சரவையில் போதிய அனுபவமின்மை வெளிப்படுவதாகவும் சாடிய அவர், மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு தங்கள் கழகம் களத்தில் தொடர்ந்து போராடும் என்றும் உறுதியளித்தார்.

Nanthini

Recent Posts

“என்னால இருக்க முடியாது…” பாலத்திலிருந்து குதித்து இளைஞர்… சிக்கிய பரபரப்பு கடிதம்… காதல் தான் காரணமா…? மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…

18 minutes ago

“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…

53 minutes ago

“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…

1 மணத்தியாலம் ago