தெலுங்கானா மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்குக் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாகசாய் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. நாகசாய்க்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண்குழந்தை இருந்த நிலையில், அந்த உண்மை விவரத்தை மறைத்து அப்பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் தனியாகச் சந்தித்து உல்லாசமாக இருந்த நிலையில், அந்த இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார். இது குறித்துத் தன் குடும்பத்தினருக்குத் தெரிந்தால் பெரும் பிரச்சனை ஏற்படும் என்று அப்பெண் அச்சப்பட்டதால், நாகசாய் அவரிடம் சில கருத்தடை மாத்திரைகளைக் கொடுத்து உட்கொள்ள வைத்துள்ளார். மாத்திரையைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அப்பெண்ணுக்குக் கடுமையான வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது.
அதிர்ச்சியடைந்த தோழிகள் அவரை உடனடியாக நிஜாம்பேட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் காக்கிநாடா அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார், தலைமறைவாக இருந்த கொடூரக் காதலன் நாகசாயை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சுமார் 8 மணி…
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்ரி ஹெகன் என்ற பெண்மணி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் தளம் வழியாக 60 வயதான…
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…
புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி வாசுதேவனின் 26 வயது மகள் டாக்டர் யோகலட்சுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்…
தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரான புவனி, தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள…