புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி வாசுதேவனின் 26 வயது மகள் டாக்டர் யோகலட்சுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.டி இறுதியாண்டு படித்து வந்தார். அடுத்தடுத்து வரவிருந்த இறுதித் தேர்வுகளுக்காகத் தீவிரமாகத் தயாராகி வந்த யோகலட்சுமி, கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்துடனும் சோர்வுடனும் காணப்பட்டுள்ளார். வழக்கம்போலப் பெற்றோருடன் இரவு உணவை முடித்துவிட்டுத் தனது அறைக்குத் தூங்கச் சென்ற யோகலட்சுமி, மறுநாள் காலை வெகுநேரமாகியும் கதவைத் திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் படுக்கையில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு கதறித் துடித்தனர். அவரது உடலின் அருகே காலியான மயக்க மருந்து பாட்டில், 9 இன்சுலின் மருந்து பாட்டில்கள் மற்றும் 3 ஊசிகள் கிடந்தன. தன் உடலிலேயே அளவுக்கு அதிகமான மயக்க மருந்தையும் இன்சுலினையும் செலுத்தி அவர் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. மேலும், அவரது டைரியில் “என் தற்கொலை முடிவுக்கு யாரும் காரணமில்லை; என்னை மன்னித்துவிடுங்கள்” என எழுதியிருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றிய பெரியகடை போலிஸார், இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…
திமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சுமார் 8 மணி…
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்ரி ஹெகன் என்ற பெண்மணி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் தளம் வழியாக 60 வயதான…
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…