சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல், அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரிடம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்துள்ளது. அவரது முகத்திலேயே கஞ்சா புகையை ஊதி ரகளையில் ஈடுபட்ட அந்த கும்பல், ஒருகட்டத்தில் முதியவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே காவல்துறையிடம் புகார் அளித்தும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே இந்தச் சம்பவம் காட்டுவதாகக் கூறி, உயிரிழந்த முதியவரின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். குற்றவாளிகள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது மற்றும் காவல்துறையின் மெத்தனப்போக்கே இத்தகைய துயரமான சம்பவங்களுக்கு வழிவகுப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னைப் பெரம்பூரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து…
பெங்களூரு மகடி சாலையில் 22 வயது பெண் கடத்தப்படுவதாகச் சந்தேகமடைந்த தெருவிலிருந்த மக்கள் கும்பல், ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக்…
தென்னிந்திய திரையுலகின் பிரபல முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப்…
லக்னோவில் உள்ள ககோரி காவல் எல்லைக்குட்பட்ட செம்ராமு கிராமத்தில், பிரேமா யாதவ் என்பவர் புதன்கிழமை இரவு கொடூரமான முறையில் கொலை…
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், தமிழக அரசியல் மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பல சுவாரஸ்யமான கருத்துகளைத்…
வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் செப்டம்பர் 19-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை…