மும்பை, நாடு முழுவதும் கடந்த 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்டமாக தொடங்கியது. பத்து நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியின் இறுதி நாள் இன்று. விநாயகர் சிலைகளை இன்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். மராட்டிய மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியை வருடா வருடம் கோலாகலமாக கொண்டாடப்படும் . இதைத்தொடர்ந்து மும்பை காவல்துறையினருக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. மும்பையில் 14 தீவிரவாதிகள் 400 கிலோ ஆர்டிஎஸ் வெடி மருந்தை வைத்துக்கொண்டு உலாவி வருவதாகவும். 35 வாகனங்களில் வெடி மருந்து வெடிக்க தயாரான நிலையில் உள்ளதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இந்நிலையில் மும்பையில் உள்ள அஸ்வினி குமார் (51) என்ற ஜோதிடரை மிரட்டல் விடுவதற்காக போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பீகாரை சேர்ந்தவர் உத்தரப்பிரதேசத்தில் வசித்து வருகிறார். இவருடைய நண்பரை போலீசில் சிக்க வைப்பதற்காகவே இதுபோன்ற மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு அஸ்வினி குமார் மீது அவரது நண்பர் ஒருவர் போலீசில் புகார் அளித்ததன் பெயரில், மூன்று மாதம் அஸ்வினி குமார் சிறையிலும் இருந்து வந்துள்ளார். ஜாமினில் வெளியே வந்த அவர் நண்பனை பழி வாங்குவதற்காகவே இதுபோன்ற மிரட்டலை விடுத்துள்ளார். நண்பனின் தொலைபேசி மூலமாக மும்பை போக்குவரத்து போலீசுக்கு இதுபோன்ற மிரட்டல் தகவலை அனுப்பி உள்ளார். போலீசார் மேலும் ஜோதிடர் அஸ்வினி குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…